IPL - மழை காரணமாக போட்டி ரத்து

#Rain #IPL #Gujarat #hyderabad #cancelled
Prasu
2 years ago
IPL - மழை காரணமாக போட்டி ரத்து

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

இதனால் மொத்தமாக 15 புள்ளிகளை பெற்ற ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

கொல்கத்தா , ராஜஸ்தான் அணிகளை தொடர்ந்து ஐதராபாத் மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

 14 போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்ற குஜராத் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4