IPL - பிளே ஆப் வாய்ப்பை இழந்த சென்னை

#IPL #T20 #Chennai #Bengaluru #2024
Prasu
6 months ago
IPL - பிளே ஆப் வாய்ப்பை இழந்த சென்னை

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பாப் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். 20 ஓவர்களில் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளெஸ்சிஸ் 54 ரன்கள் குவித்தார். சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கேப்டன் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

இந்த ஜோடியில் கெய்க்வாட் தான் சந்தித்த முதல்பந்திலேயே (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். 

அடுத்து களமிறங்கிய மிட்செல் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடி காட்டிய இந்த ஜோடி, அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தியது. 

கடைசி ஓவரில், அதிரடி காட்டி வந்த தோனி 25 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக யாஸ் தயாள் 2 விக்கெட்டுகளும், கேமரான் கிரீன், சிராஜ், பெர்குசன், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!