ஜெர்மனியில் இருந்து சுவிசிற்குள் 250 கிலோ இறைச்சி கடத்த முயன்ற மூவர் கைது
இன்று ஜேர்மன் நாட்டில் இருந்து சூர்சாக் என்ற ஜேர்மன் எல்லை வழியாக 250 கிலோ இறைச்சிகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற மூன்று பேரை சுவிஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சூர்சாக் என்ற இடத்தில் இருந்து 3 மைலுக்குள் சூரிச் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தை சோதனை செய்த போது இந்த 250 கிலோ இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து சட்டத்தின் படி ஜெர்மனி அல்லது எந்த ஒரு நாட்டிலிருந்தும் இறைச்சி , எண்ணெய் , சிகரெட் , மதுபானங்கள் , பால் பொருட்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அனுமதி இன்றி கொண்டு வருவது சட்டவிரோதமான செயலாகும்.
அதேநேரம் மா, மரக்கறி போன்ற பொருட்கள் 300 சுவிஸ் பிராங்க் வரை கொண்டு வர முடியும்.
உதாரணமாக இறைச்சி வகைகள் 1கிலோவிற்கு மேல் சட்டவிரோதமாக எல்லை தாண்டி கொண்டுவருவது சட்டத்திற்கு புறம்பான விடயமாகும்.
காரணம் சுகாதார கேடு , ஜெர்மனி மற்றும் சுவிற்சர்லாந்து இடையே உள்ள உணவு கட்டுப்பாடு , சட்டம் வேறுபடுவதால் இந்த கட்டுப்பாடுகள் உள்ளது.
அந்தவகையில் 1-50 கிலோ இறைச்சிகளுக்கு ஒரு தண்டனையும் , 50-150 கிலோ இறைச்சிகளுக்கு ஒரு தண்டனையும் , 150-250 கிலோ இறைச்சிகளுக்கு கடூழிய தண்டனை வழங்கப்பட கூடும்.