IPL - ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஐதராபாத்

#IPL #T20 #hyderabad #Rajasthan #2024
Prasu
2 years ago
IPL - ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஐதராபாத்

நடப்பு ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

இதனை தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஐதராபாத் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறக்கினர். 

அபிஷேக் 12 ரன்களில் அவுட் ஆனார். அடுத்துவந்த திரிபாதி 37 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடக்க வீரர் ஹெட் 34 ரன்கள் எடுத்து கேட்ச் மூலம் அவுட் ஆனார். 

இறுதியில் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கிளாசன் அதிகபட்சமாக 50 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - டாம் கோலர் காட் மோர் களமிறங்கினர். டாம் 10 ரன்களில் அவுட் ஆனார். 

அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால், ஐதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

கடைசி வரை போராடிய துருவ் ஜூரெல் 35 பந்துகளில் 56 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டிக்குள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நுழைந்தது. 

வரும் ஞாயிற்றுகிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொள்ள உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4