எகிப்துடனான காசா எல்லையை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த இஸ்ரேல்
காஸா முனைக்கும் எகிப்துக்கும் இடையிலான வழிப்பாதையை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளது.
இந்தத் தகவலை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டது. இதன்மூலம் பாலஸ்தீனத்தின் நிலம்வழி எல்லை முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் இன்னும் ஏழு மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ராஃபா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இஸ்ரேல் அதைப் புறக்கணித்து அந்நகரம் மீதான தாக்குதல்களைத் தொடர்கிறது.
ராஃபாவில் மில்லியன்கணக்கான பாலஸ்தீன அகதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்துடனான காஸா எல்லையைக் கைப்பற்றியதை அடுத்து, ராஃபாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கு அனுப்பப்படும் உணவு, நீர், மருந்து ஆகியவை அவர்களைச் சென்றடைய என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது குறித்து இஸ்ரேல் தகவல் தெரிவிக்கவில்லை என்று அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.