31 கோடி கொடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி

#company #CEO #LayOff #vehicle
Prasu
5 months ago
31 கோடி கொடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி

நிசான் மோட்டார் கம்பெனியின் முன்னாள் சி.இ.ஓ. அஷ்வானி குப்தா நிறுவனத்தை விட்டு வெளியேற நிசான் நிறுவனம் அவருக்கு 3.7 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 31 கோடி வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அஷ்வானி குப்தா நிறுவனத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அஷ்வானி குப்தா நிசான் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

நிசான் நிறுவனத்தின் எதிர்காலமாக கருதப்பட்ட நிலையில், அதன் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து வெளியேறிய சம்பவம் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு நிசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அஷ்வானி குப்தா செயல்பட்டு வந்தார்.

 தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து அஷ்வானி குப்தா விலகுவதாக நிசான் நிறுவனம் அறிவித்ததை அடுத்து, அவர் அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!