உக்ரைனுக்கு ஆதரவாக முக்கிய தடையை தளர்த்திய பைடன்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, உக்ரைனின் உள்கட்டமைப்புகளை பெருமளவில் அழித்துள்ளது.
ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதனால் 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது.
இரு தரப்பிலும் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஆயுதங்கள் மூலம் ரஷிய இலக்குகளை தாக்கலாம் என உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
ரஷிய பகுதிக்குள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தளர்த்தியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் கார்கிவ் பகுதியில் ரஷியா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ள நிலையில், அந்த பிராந்தியத்தின் எல்லையில் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.