இஸ்ரேலியர்கள் உள்நுழைய தடை : பிரபல நாடு எடுத்த அதிரடி முடிவு!
இஸ்ரேலியர்கள் உள்நுழைவதை தடுக்கும் வகையில் மாலைத்தீவு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
காசாவில் நடந்த போர் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மாற்ற அவரது அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், இந்த செயல்முறையை மேற்பார்வையிட துணைக் குழுவை அமைக்கும் என்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன தேவைகளை மதிப்பிடுவதற்கும் நிதி திரட்டும் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி விசேட தூதுவரை நியமிப்பார் என்றும் அது கூறியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் அதன் குடிமக்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் - மாலத்தீவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைத்தது.
தற்போது அங்குள்ளவர்கள் வெளியேறுவது குறித்தும் பரிந்துரைத்தது. ஏற்கனவே நாட்டில் உள்ள இஸ்ரேலிய குடிமக்களுக்கு, வெளியேறுவது குறித்து பரிசீலிக்க மாலைத்தீவு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.