உலக மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து - ஐ.நா எச்சரிக்கை
நிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் மமுழுவதும் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
வழக்கத்துக்கு மாறாக அதிக மழையும் அதிக வெயிலும் மனிதர்களை பாதிக்கத் தொடங்கியுள்ளன.
லத்தீன் அமெரிக்க நாடுகள், துவபாய், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சி, இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலை ஆகியவை இனி வரவிருக்கும் பேராபத்துகளுக்கான முன்னெச்சிரிக்கையாகும்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வெயில் பதிவாகியுள்ளது. ஹீட் ஸ்ட்ரோக்கால் இந்த வருடத்தில் மட்டும் 250 க்கும் அதிகமானோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ் கவலையளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் சூழல் தினமான இன்றுகுட்ரஸ் தனது உரையில், "கடந்த மே மாதம் உலகின் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. கடந்த 12 மாதங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
அடுத்த 5 வருடத்துக்குள் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸை (2.7 டிகிரி பாரன்ஹீட்) கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளது" என்று உலக வானிலை நிறுவனத்தின் கணிப்பை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.