எவரெஸ்ட் பகுதியை சுத்தம் செய்த நேபாள ராணுவ அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இமயமலையில் அமைந்து உள்ளது உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட். இந்த எவரெஸ்ட் சிகரம் 8848.86 மீட்டர் உயரம் கொண்டதாகும்.
நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட சிகரத்தில் ஏற உலகின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேறும் வீரர்கள் வருகை தருவார்கள். இவர்கள் மலையேற உதவி செய்யும் ஷெர்பாக்களின் உதவியுடன் மலையேறுவார்கள்.
பலர் எவரெஸ்டின் உச்சிக்கு செல்ல முயன்று குளிர் தாங்க முடியாமல் உயிரிழப்பது உண்டு.
அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பதும் உண்டு. சில நேரங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முடியாது நிலையும் ஏற்படும். இவ்வாறு மீட்க முடியாதவர்களின் உடல்கள் அப்படியே கிடக்கும்.
மேலும், மலையேறும் நபர்களால் எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் கடந்த 2019-ம் ஆண்டு மலையை சுத்தம் செய்தல் பிரசாரத்தை (Mountain Cleaning Campaign) நேபாள அரசு மேற்கொண்டது. ஆண்டுதோறும் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த வருடம் கடந்த ஏப்ரல் மாதம் நேபாள நாட்டின் ராணுவ வீரர்கள் இந்த திட்டத்தை தொடங்கினர்.
12 பேர் கொண்ட ராணுவ வீரர்கள் 18 பேர் கொண்ட மலையேற உதவி புரியும் குழுவுடன் பயணத்தை மேற்கொண்டது.
55 நாள் பயணத்தின் முடிவில் 11 டன் குப்பைகளை எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து அகற்றியுள்ளது. மேலும், ஐந்து மனித உடல்கள் மற்றும் ஒரு மண்டை ஓடு ஆகியவற்றையும் அகற்றியுள்ளது.