செக் குடியரசில் 2 ரயில்கள் விபத்து - 4 பேர் பலி

#Death #Accident #Train #CzechRepublic
Prasu
5 months ago
செக் குடியரசில் 2 ரயில்கள் விபத்து - 4 பேர் பலி

செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராக்கிலியில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் பர்டுபிஸ் ரெயில் நிலையம் உள்ளது. 

இந்த ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில் 4 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய ரெயில் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாகும்.

இந்த ரெயில் ஸ்லோவாக்கியாவின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு உக்ரைன் நகரான சோப் நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த ரெயிலில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

இது தொடர்பாக செக்குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் பியாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் 2 ரெயில்கள் மோதிக்கொண்டது மிகவும் துரதிஷ்ட வசமானது. 

விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!