காங்கோவில் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற ஜூடித் சுமின்வா துலுகா

#Prime Minister #Women #Congo #sworn
Prasu
5 months ago
காங்கோவில் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற ஜூடித் சுமின்வா துலுகா

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் (காங்கோ) கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 

இதில் யு.டி.பி.எஸ். கட்சியின் தலைவர் பெலிக்ஸ் சிசெகெடி மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆளும் கூட்டணியும் ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை பெற்றது. ஆனால், கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதில் தாமதம் ஆனதால், புதிய அரசு அமைக்கவும் தாமதம் ஆனது. 

இந்நிலையில், கூட்டணி கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்ட நிலையில், கடந்த மாதம் புதிய அரசாங்கம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. 

பிரதமர், 6 துணை பிரதமர்கள் மற்றும் 10 இணை மந்திரிகள் உட்பட 55 உறுப்பினர்களைக் கொண்ட மந்திரிசபை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மந்திரி சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

துலுகாவின் செயல்திட்டத்திற்கு துணை பிரதமர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஒப்புதல் அளித்ததை அடுத்து இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. 

பிரதமர் மற்றும் மந்திரிசபை உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றனர். பிரதமராக ஜூடித் சுமின்வா துலுகா பதவியேற்றார். 

இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

 முன்னதாக, பொருளாதார நிபுணரான துலுகா தனது செயல்திட்டத்தை வழங்கும்போது, பிரதமராக நாட்டிற்கு சேவையாற்றும் முதல் காங்கோ பெண்மணி என்பதை நினைத்து பெருமைப்படுவதாக கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!