உலகின் பணக்கார தலைவர்கள் பங்கேற்கும் G7 உச்சிமாநாடு!
உலகின் ஏழு பணக்கார நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி7 மாநாடு இத்தாலியில் இன்று நடைபெறுகிறது.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இன்று (13.06) முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும், ஜி7 மாநாட்டில் ஆப்பிரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு மாநாட்டில் உக்ரைன் மற்றும் காசா பகுதியில் ராணுவ மோதல்கள் குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் G7 உச்சி மாநாடு நடைபெறும் அதே நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இரு தலைவர்களும் சந்திக்கும் குறிப்பிட்ட தேதி அல்லது இடம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.