மங்கோலியாவில் பனிப்புயல் காரணமாக 70 லட்சம் கால்நடைகள் மரணம்

#Death #Climate #Animal #Mongolia #snowstorm
Prasu
5 months ago
மங்கோலியாவில் பனிப்புயல் காரணமாக 70 லட்சம் கால்நடைகள் மரணம்

ரஷியாவுக்கும், சீனா மற்றும் தீபெத்துக்கு இடையில் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் மங்கோலியா அமைந்துள்ளது. 

இதனால் வருடத்திற்கு 10 மாதங்கள் மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில் குளிர்ந்த வானிலையே நிலவும். 

இந்தநிலையில் மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருகிறது.

இதன் காரணமாக அங்குள்ள மாகாணாங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக மங்கோலியா நாடு முழுவதும் பனியால் உறைந்து உள்ளது.

விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை பனிப்புயலுக்கு சேதமடைந்தன. இதனால் அங்கு உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். 

இந்தநிலையில் கடுமையான வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள உணவு பொருள் தட்டுப்பாட்டால் மங்கோலியாவில் 70 லட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!