விசா விதிகளை கடுமையாக்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம் : மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சிக்கல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
5 months ago
விசா விதிகளை கடுமையாக்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம் : மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சிக்கல்!

ஜூலை முதல் திகதியில் இருந்து விசா விதிமுறைகளை கடுமையாக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.  

இதன்படி, சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து தங்கி மாணவர் வீசா பெறும் வாய்ப்பு இனி இழக்கப்படும்.  

போர் மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி செழிப்பைத் தேடி பணக்கார நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.

அதே நேரத்தில் ஏராளமான மக்கள் வெற்றிகரமான எதிர்கால நம்பிக்கையுடன் வளர்ந்த நாடுகளில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை நாடுகின்றனர்.

 எனினும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் நாட்டிற்குள் நுழைவது தற்போது உலகின் வளர்ந்த நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. 

இத்தகைய பின்னணியில், உயர்கல்விக்காக வளர்ந்த நாடுகளுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

ஆஸ்திரேலிய அரசாங்கம் கடந்த ஆண்டு தனது விசா விதிகளை கடுமையாக்கும் திட்டங்களை அறிவித்தது மற்றும் 2025 க்குள் நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயித்தது.  

இதன்படி, சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்து தங்கி மாணவர் வீசா பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இடைநிறுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும், தற்காலிக பட்டதாரி விசாவில் நாட்டில் தங்கியிருக்கும் பட்டதாரிகள், மேலதிக கல்விக்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை மீண்டும் இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!