இத்தாலியில் போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி
ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெறுகிறது.
மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.
இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்குக்கும் இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி7 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர், பிரிட்டன் பிரதமர் மற்றும் உக்ரைன் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மாநாட்டின் இடையே வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார்.
இந்த மாநாட்டில் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் குறித்து போப் பிரான்சிஸ் உரையாற்ற உள்ளார்.