ரஷ்யா - உக்ரைன் போரை தீவிரப்படுத்த உதவும் சீனாவுக்கும் கடும் எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
ரஷ்யா - உக்ரைன் போரை தீவிரப்படுத்த உதவும் சீனாவுக்கும் கடும் எச்சரிக்கை!

 ரஷ்யா உக்ரைன் மீதான யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சீனா உதவுகின்றது என ஜி ஏழு நாடுகளின் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

கடுமையான தொனியில் ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். 

மொஸ்கோவின் நடவடிக்கைகளிற்கு பொருள் உதவிகளை வழங்குபவர்களிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.  

ரஷ்யாவின் இராணுவ தொழில்துறை வளாகத்திற்கு உதவுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கைகளை எடுக்கச்செய்வதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ள வேளையிலேயே ஜி7 நாடுகளின் தலைவர்களின் இந்த  எச்சரிக்கை வந்துள்ளது.