எப்படி சுவிஸ் நாட்டில் உள்ளவர்கள் கோடீஸ்வரராக வாழ்கிறார்கள்? உண்மை இதுதான்
சுவிஸ் நாட்டில் வேலை செய்யும் ஒருவரில் வருமானத்தில் இருந்து கழிக்கப்படும் பென்சன் பணம் அல்லது ஓய்வூதிய பணத்தை இரட்டிப்பாகவும் சில பெரிய நிறுவனங்கள் மூன்று மடங்காகவும் போட்டு 65 வயதுவரை சேமிப்பில் இட்டு சிறிய வட்டியோடு அவர்கள் ஆணாக இருந்தாகால் 63 -65 வயதுக்கு பின்னரும் பெண்ணாக இருந்தால் 60-63 வயதுக்குப் பின்னரும் மாதாமாதம் அல்லது விரும்பின் காரணத்துக்கு உட்பட்டு முழுமையாகவும் கொடுக்கப்படுவது வழக்கம்.
முன்கூட்டியே இவர்கள் ஓய்வூதியத்தை எடுக்கவேண்டுமானால் சுவிஸ் நாட்டில் தமது பெயரில் வீடு வாங்க குறிப்பிட்ட வயது எல்லைக்கு உட்பட்டு இருக்கும் பெறுமதியை எடுக்கலாம் அல்லது சுவிஸ் நாட்டில் தனிப்பட்ட தொழில் செய்யவும் எடுக்கலாம் அதுவும் சில சட்ட திட்டங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே எடுக்கலாம்.
இல்லையேல் ஒருவர் சுவிஸ் நாட்டை விட்டு முழுமையாக வெளியேறி பிற நாட்டில் வாழ்வதாக இருப்பினும் அவரது ஓய்வூதியத்தை அவர் பிற நாட்டுக்கு சென்று 6 மாதங்களுக்குப் பின்னர் அவர் இருக்கும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் பலர் பல வழிகளில் இப்பணத்தை எடுத்து தமது பிள்ளைகளுக்கு சுவிஸ் நாட்டில் வீடு வாங்க முற் கட்டணமாகவும் உபயோகிக்கின்றார்கள். சிலர் தொழில் செய்கின்றோம் என்ற தொனியில் ஓய்வூதியத்தை எடுத்து வியாபாரத்தில் நஸ்டம் ஏற்ப்பட்டு குடும்பங்களையும் விட்டு தெருவில் நிற்கிறார்கள். சிலர் அதனை ஒரு மூலதனமாக கொண்டு சென்று இலங்கையில் பெரிய தோட்டங்கள் பண்ணைகள் செய்து அதனை பெருக்கியும் இருக்கிறார்கள்.
சிலர் ஓய்வூதியத்தை மாத வருமானமாக பெற்று அமைதியாக சுவிஸ் நாட்டிலேயே அனுபவிக்கின்றார்கள். 30 வருடங்கள் சுவிஸ் நாட்டில் இருக்கும் ஒருவரில் நடுத்தர சம்பளப்படி கிட்டத்தட்ட 150000.- பிராங்குகள் ஓய்வூதியம் கிடைக்கிறது. பெரிய நிறுவனங்களான மிக்ரோஸ், கோப், வைத்தியசாலைகள், வயோதிபர் இல்லங்களில் தொழில் புரிவோரும்கு 300000.- வரைகூட ஓய்வூதியம் கிடைக்கிறது. நாட்டை விட்டு செல்வோருக்கு AHV கட்டணம் என்ற கொடுப்பனவும் கிட்டத்த்கட்ட 100000.- பிராங்குகளும் கிடைக்கிறது.
இக்கழிவுகளை ஊதியத்தில் இருந்து கழிக்கும் பொழுது எம்மவர்கள் அரசாங்கதை திட்டுவதும் உண்டு. ஆனால் அதன் நன்மையை யாருமே வாழ்த்தி பேசி நன்றி செலுத்துவது இல்லை. இதை விட வேலை இழப்பு காப்புறுதி எனப்படும் ALV, விபத்தில் நஸ்ட ஈடு பெற NBU, இப்படி சில சலுகைகளையும் சுவிஸ் அரசு நடை முறையில் வைத்துள்ளது.
இதனால் தான் சுவிஸ் நாட்டில் வேலை இழந்தவர்கள் கூட சிறப்பாக வாழ்கின்றார்கள். ஆம் சுவிஸ் ஒரு சொர்க்க பூமி என்பதில் மறுப்பில்லை. இருந்தும் சிலர் தம் வாழ்வை தொலைத்தவர்களும் உள்ளனர். காரணம் பணம் சிலவேளைகளில் கண்ணை மறைப்பதுதான்.
மேலும் சுவிஸ் தொடர்பான பல தகவல்களை, சுவாரகசியங்களை அடுத்த பதிவில் தருகிறோம் தொடர்ந்து lanka4 ஊடகத்துடன் இணந்து இருங்கள்.