மிதுன ராசியினருக்கு எதிர்ப்பு தோன்றும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
மிதுன ராசியினருக்கு எதிர்ப்பு தோன்றும் நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம்வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். அவசர முடிவு சங்கடத்தை உண்டாக்கும்.கார்த்திகை 1: முயற்சி வெற்றியாகும் நாள். விருந்து விசேஷங்களில் தீவிரமாக கலந்து கொள்வீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.ரோகிணி: வரவு ஒரு பக்கம் வந்தாலும் செலவு மறுபக்கம் தயாராக இருக்கும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.மிருகசீரிடம் 1,2: மகிழ்ச்சியான நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி லாபம் தரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் காண்பீர். நன்மையான நாள்.திருவாதிரை: எதிர்ப்பு தோன்றும் நாள். புதிய முயற்சி இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். லாபம் அதிகரிக்கும் நாள்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை சரியாகும். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பூசம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வேலை பளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.ஆயில்யம்: நெருக்கடி விலகும். வியாபாரத்தில் உபரி வருமானம் ஏற்படும். வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

சிம்மம்

மகம்: அலுவலகத்தில் இருந்த பிரச்னை விலகும். உங்கள் அணுகுமுறை லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.பூரம்: செயல்களில் சிரமம் தோன்றும் நாள். உங்களுக்கு எதிரான சிலரின் செயலை முறியடிப்பீர்கள். உத்திரம் 1: உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். தந்தை வழி உறவுகளால் லாபம் காண்பீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: தொழிலில் கவனத்துடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.அஸ்தம்: உங்கள் செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை. சித்திரை 1,2: நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர். நெருக்கடி விலகும். உடன் பணிபுரிவோரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து மகிழ்ச்சி அடைவீர். புதிய முயற்சி லாபமளிக்கும். சங்கடம் நீங்கும்.சுவாதி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். கூட்டுத் தொழிலில் கவனம் செலுத்துவது அவசியம்.விசாகம் 1,2,3: வருமானம் அதிகரிக்கும். நினைத்தவற்றில் லாபம் அடைவீர். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

விருச்சிகம்

விசாகம் 4: ஆதாயமான நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். போட்டியாளர் விலகிச் செல்வார்.கேட்டை: உங்கள் முயற்சி வெற்றியாகும். நேற்றைய பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.

தனுசு

மூலம்: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர். பணிபுரியும் இடத்தில் சில சங்கடம் தோன்றும்.உத்திராடம் 1: விலகிச்சென்றவர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் திறமை வெளிப்படும் நாள். சமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.திருவோணம்: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.அவிட்டம் 1,2: உங்கள் வேலையில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4: திட்டமிட்ட முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளியூர் பயணம் லாபமாகும்.சதயம்: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். குடும்பத்தில் சில சங்கடம் தோன்றும். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.பூரட்டாதி 1,2,3: பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த பணம்வரும். உடல், மன நிலையில் உற்சாகம் தோன்றும்.

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் செயல் லாபமாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடையை சரி செய்வீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.உத்திரட்டாதி: உடன் பணிபுரிபவர்களால் நெருக்கடி தோன்றும். உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.