சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் 2024ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு

#Swiss #Punkudutivu #Commitee #2024
Prasu
2 days ago
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் 2024ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2024 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை தெரிவிற்கான கூட்டம் பேர்ன் மாநிலம் புர்க்டோர்வ் நகரில் நடைபெற்றது.

இக்கூட்டம் திரு சொக்கலிங்கம் ரஞ்சன் முன்னாள் தலைவர் தலைமையில் நடைபெற்றது. 

அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு செயலாளர் அறிக்கை ,பொருளாளர் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு முன்பு வந்திருந்த உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படல் வேண்டும் என்றும் தலைவர் பொறுப்பில் ஒருவர் ஒருமுறை மாத்திரமே இரண்டு ஆண்டுகால நிர்வாகத்தில் தலைமை பொறுப்பில் இருக்கமுடியும் எனவும்  ஏனைய பொறுப்புக்களை வகிப்போர் மறுபடி தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அப்பொறுப்புக்களை மீளவும் வகிக்கமுடியும் எனவும்  முக்கியமான , ஏகமனதான தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

images/content-image/1719937640.jpg

இதன் அடிப்படையில் புதிய தலைவராக திரு .சுப்பையா வடிவேலு புங் -10 அவர்களும் , செயலாளராக திரு. நவரெத்தினம் சிவானந்தன் புங்- 7 அவர்களும் பொருளாளராக திரு . சதானந்தன் புங்-9 அவர்களும் , உபதலைவராக திரு . தயாபரன் புங் -6அவர்களும், உப செயலாளராக திரு. நிர்மலன் புங் -7 அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 

நிர்வாகசபை உறுப்பினர்களாக திரு.இலட்சுமணன் புங்-10, திரு சஞ்ஜீவன் புங் -6, திரு . சதீஷ் புங்-9, திரு மணிவண்ணன் -9, திரு . சிவநாதன்-9 திரு . தகீதன் புங்-6, திருமதி. செல்வி சுதாகரன் புங்- 4ஆகியோர் நிர்வாகசபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்படுள்ளனர். 

images/content-image/1719937670.jpg

நாம் பிறந்த மண்ணின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயலாற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.

images/content-image/1719937701.jpg