சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கவே கூடாது! இத்தனை தீமைகளா?
உணவு கூட சில நாட்களுக்கு இல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. நாம் உண்ணும் உணவையே செரிமானமடையச் செய்து, கழிவுகளை வெளியேற்றச் செய்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேளையாகத் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றம் அடையும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கவே கூடாது. உணவு உண்ணும் முன்பு ஒரு பெரிய டம்ளர் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் உணவில் உள்ள எல்லா ஊட்டச்சத்துக்களும் முழுமையாகக் கிடைககும். ஜீரண ஆற்றலையும் மேம்படுத்தும்.
சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கலாம். உணவுகளை எளிதாக உடைத்து அதிலுள்ள ஊட்டச்சத்தை உடல் உறிஞ்ச உதவி செய்யும். அதிகமாக குடிக்கக் கூடாது. அதனால், வயிற்றில் உள்ள அமிலத்தன்மை குறைந்து ஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இரவு தூங்கச் செல்லும்முன்பாக தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் அந்த சமயங்களில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க முடியும்.
உடற்பயிற்சியின் முன்,இடையில் மற்றும் பின் தண்ணீர் குடிப்பது நல்லது தான். தசைகளில் ஏற்படும் தளர்வைப் போக்கும்.