வெளிநாடுகளுக்கு குடியேறும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

#Switzerland #people #immigration #Foriegn
Prasu
4 months ago
வெளிநாடுகளுக்கு குடியேறும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எப்படியாவது ஒரு முறையாவது சுவிட்சர்லாந்துக்குச் சென்றுவிடமாட்டோமா என பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கனவு கண்டுகொண்டிருக்க, வெளிநாடுகளில் குடியமரும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துவருவதாக சுவிஸ் அமைப்பொன்று தெரிவிக்கிறது.

வெளிநாடுகளில் குடியேறும் சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாடுகளில் குடியேறும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துவருவதாக Organisation of the Swiss Abroad (OSA) என்னும் சுவிஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி, 813,400 சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்துவருகிறார் கள் என்கிறது OSA அமைப்பு. 

இது, முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 1.7 சதவிகிதம் அதிகம் என்கிறார் OSA அமைப்பின் இயக்குநரான Ariane Rustichelli என்பவர்.

இப்படி வெளிநாடுகளில் சென்று குடியேறும் சுவிஸ் நாட்டவர்களின் விருப்ப நாடாக உள்ளது, பிரான்ஸ்! வெளிநாடுகளில் வாழும் சுவிஸ் நாட்டவர்களில் கால்வாசிப்பேர் பிரான்சில் வாழ்கிறார்கள். 

அதற்கு அடுத்தபடியாக, ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அவர்கள். ஆசியா நாட்டவர்கள் பலருக்கும் சுவிஸ் வாழ்க்கை ஒரு கனவு. 

ஆனால், சுவிஸ் நாட்டவர்களில் சிலர் ஆசியாவிலும் சென்று குடியமர்ந்துள்ளார்கள். 292,700 பேர் பிற நாடுகளில் குடியமர்ந்துள்ள நிலையில், அவர்களில் 16 சதவிகிதம் பேர் வட அமெரிக்காவிலும், 7 சதவிகிதம் பேர் லத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும், 7 சதவிகிதம் பேர் ஆசியாவிலும், ஒரு சதவிகிதம் பேர் ஆப்பிரிக்காவிலும் சென்று குடியமர்ந்துள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!