எவ்வாறு தூங்கினால் ஆரோக்கியமாக இருக்கலாம்? - தூக்க நிலைகளின் பதிவு

#Health #Human #sleep #life
Prasu
4 months ago
எவ்வாறு தூங்கினால் ஆரோக்கியமாக இருக்கலாம்? - தூக்க நிலைகளின் பதிவு

ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம் நிம்மதியான தூக்கம். அதுதான் அடுத்த நாளில் நமது அன்றாட ஓட்டத்திற்கு உதவுகிறது.

குறைந்தது ஒரு மனிதனுக்கு எட்டு மணி நேர தூக்கம் என்பது அவசியம். வெவ்வேறு தூக்க நிலைகள் உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன. 

அவற்றைப்பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். உங்கள் வசதிக்கேற்ப இடது பக்கமாகவோ அல்லது வலது பக்கமாகவோ நீங்கள் தூங்கலாம். இருப்பினும், இடது பக்கமாக தூங்குவது சிறந்தது என கூறப்படுகிறது. 

ஒரு ஆய்வின் முடிவில், வலது பக்கமாக தூங்குவதை விட இடது பக்கமாக தூங்குவது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. 

images/content-image/1720904338.jpg

இடது பக்கம் திரும்பி தூங்குவது குடல் இயக்கங்களை ஊக்குவிக்க உதவுகிறது. நமது வயிறு அழுந்தும்படி குப்புறப் படுத்து தூங்குவது சுவாச பிரச்சனைகள் மற்றும் குறட்டை போன்ற பாதிப்புகளுக்கு தீர்வாக இருக்கிறது. 

இருப்பினும், வயிறு அழுந்தும்படி தூங்குவது கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் வலியை ஏற்படுத்தலாம். அது மட்டும் இன்றி தசைகள் மற்றும் மூட்டு பகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. 

எனவே சிறிது நேரம் இந்த நிலையில் தூங்கிவிட்டு பின்னர் தூக்க நிலையை மாற்றிக் கொள்ளலாம் அல்லது தலையணை இல்லாமல் குப்புறப்படுத்து தூங்கலாம்.

ஒரு குழந்தை கர்ப்பப்பைக்குள் தன்னை எப்படி வைத்திருக்குமோ அதுபோன்ற நிலையில் கை, கால்களை குறுக்கி தூங்கும் நிலையே கருவின் நிலையில் தூங்குதல் ஆகும். 

images/content-image/1720904347.jpg

இது சிறந்த தூக்கத்தை தருவதோடு மட்டுமல்லாமல் குறட்டை பிரச்சனை உள்ளவர்களுக்கும் தீர்வு தருகிறது. 

இருப்பினும் இந்த நிலையில் தூங்கும்போது உங்கள் உடல் ஆனது தளர்வாக இருக்கும் படி வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், உடலை அதிகமாக இறுக்கி உறங்குவது சுவாச தடையை ஏற்படுத்தலாம்.

இதுவும் முன்பு குறிப்பிட்டது போல கருவின் நிலையைக் ஒத்த ஒரு நிலைதான். ஒரு பக்கமாக திரும்பி படுத்தல் ஒரு சிலருக்கு சிறந்த தூக்கத்தை தருகிறது. உங்களுக்கு இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாக இருந்தால் இந்த நிலையில் தூங்கலாம். 

இது ஆழ்ந்த தூக்கத்தை தருவதோடு மட்டுமல்லாமல், குறட்டை போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் தருகிறது. ஆனால் தொடர்ந்து ஒரே நிலையில் தூங்குவதை மாற்றி தூங்குவது சிறந்தது. 

images/content-image/1720904359.jpg

ஒரே நிலையில் தூங்குவது தசை பிடிப்புகளுக்கு வழிவகுக்கும். முதுகு பகுதி முழுவதும் தரைப்பகுதியில் தொடுமாறு நேராகப் படுத்து உறங்குவதும் சிறந்த தூக்கத்திற்கு வழி வகுப்பதாக கூறப்படுகிறது. 

முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த வகையான தூக்க நிலை உதவுகிறது. மேலும் இது இடுப்பு மற்றும் முழங்கால்களில் ஏற்படும் வலியை சரி செய்யவும் உதவுகிறது. 

இது சீரான தூக்கத்திற்கு வழி வகுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் உறங்குவது மூட்டுகளில் அழுத்தத்தை கொடுப்பதில்லை. நேராகப்படுத்து தூங்குவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது.

images/content-image/1720904370.jpg

அன்றாட பணிகளில் ஈடுபட்டுள்ள நமக்கு ஓய்வு என்பது மிகவும் அவசியம். உடல் உறுப்புக்கள் சீராக இயங்குவதற்கு குறைந்தது 8 மணி நேர ஓய்வு என்பது தேவை. 

எனவே தூக்க இடையூறுகள் இருப்பின் உங்களுக்கு ஏற்ற தூக்க நிலையை கண்டறிந்து தூக்க பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். இடையூறற்ற தூக்கம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 

எந்த நிலையில் தூங்குவது சிறந்தது என்பதை அறிய மேற்கண்ட நிலைகளை தினசரி சோதனை செய்து பார்க்கவும். தூங்குவதில் சிரமம் இல்லாதவர்கள் தூக்க நிலையில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்த தேவையில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!