வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை உயர்த்தும் சுவிஸ் பல்கலைக்கழகங்கள்
சுவிட்சர்லாந்தின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் இரண்டு, வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன.
சுவிட்சர்லாந்தின் Lausanneஇல் அமைந்துள்ள Swiss Federal Institute of Technology Lausanne நிறுவனமும், சூரிச்சில் அமைந்துள்ள ETH பல்கலைக்கழகமும், வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளன.
இந்த முடிவை பெடரல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கவுன்சில் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 12ஆம் திகதி அறிவித்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் பொருந்தும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஆக, தற்போது செமஸ்டர் ஒன்றிற்கான கல்விக்கட்டணம் 780 சுவிஸ் ஃப்ராங்குகளாக உள்ள நிலையில், 2025ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் துவங்கும் செமஸ்டரிலிருந்து புதிய கல்விக்கட்டணம் அமுலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.