சுவிட்சர்லாந்தில் அறிமுகமாகவுள்ள தற்கொலை சாதனம்

#Euthanasia #Swiss
Prasu
2 months ago
சுவிட்சர்லாந்தில் அறிமுகமாகவுள்ள தற்கொலை சாதனம்

சுவிட்சர்லாந்தில் சுயமாக இயக்கக்கூடிய Portable Suicide Pod தற்கொலை சாதனம் ஒன்றை முதன் முதலில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

"லாஸ்ட் ரிசார்ட்" (Last Resort) என்ற உதவி தற்கொலை ஆதரவு அமைப்பு இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

"சார்கோ" (Sarco) என்ற இந்த சாதனம் 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எதிர்காலத்தை ஒத்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இது சாதனத்திற்குள் இருக்கும் காற்றுடன் கலந்திருக்கும் ஆக்சிஜனை நைட்ரஜன் வாயு கொண்டு மாற்றும், இதன் மூலம் உடலில் ஆக்சிஜன் கிடைப்பது தடைபட்டு அமைதியான முறையில் மரணம் ஏற்படும். இதனை பயன்படுத்துவதற்கான செலவு மிகக் குறைவு($20) என தகவல் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு உதவி செய்வது சட்டப்பூர்வமானது என்றும், இறுதி நடவடிக்கையை நபர் தானே மேற்கொள்ள வேண்டும் என்றும் "லாஸ்ட் ரிசார்ட்" அமைப்பு கருதுகிறது.

 "சார்கோ" சாதனத்தில் ஆர்வம் காட்டுபவர்கள் பலர் உள்ளனர். எனவே இது விரைவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளது" என்று "லாஸ்ட் ரிசார்ட்" அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஃப்ளோரியன் வில்லட் (Florian Willet) கருத்து தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!