சுவிசில் பலர் கைது! கொரோனா கிறெடிற் எடுத்தவர்களின் சோகம்

#Switzerland #swissnews
Mayoorikka
8 months ago
சுவிசில் பலர் கைது! கொரோனா கிறெடிற் எடுத்தவர்களின் சோகம்

உலகில் அனைத்து நாடுகளையும் உலுக்கியது கொரோனா தொற்று.

 நாட்டு மக்களின் இறப்பை நோய்க் கிருமியும் அதன்போது ஏற்பட்ட பொருளாதாரத்தாலும் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்தார்கள். 

இலங்கை உட்பட பல வல்லரசு நாடுகளே ஆடிப்போய் உட்காந்திருந்தார்கள். அதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் வேலையில்லா ஊதியத்தையும் நிறுவனங்களிற்கான உதவிகளையும் அரசே பொறுப்பேற்று மானியம் வழங்கியது.

 சில ஆண்டுகளில் வட்டியில்லா கடனாகவும் சில நாடுகளில் ஊதியமாகவும் சில நாடுகளில் இலவசமாகவும் பணம் பொருள் என பல உதவிகள் மக்களுக்கு கிடைத்தன. அவ்வகையில் சுவிஸ் நாட்டில் மானிய ஊதியம் மற்றும் நிறுவனங்களுக்கு சில வரையறைக்கு உட்பட்டு வட்டியில்லா கடனை கொடுத்தது.

 இதை சாதகமாக வைத்து பல நிறுவனங்கள் போலி நிறுவனங்களையும் போலி காரணங்களையும்  காட்டி பல லட்சம் பிராங்குகளை வட்டியில்கா கடனாக பெற்றனர். 

சிலர் நாட்டைவிட்டே ஓடி ஒழிந்தார்கள் சிலர் நிறுவனத்தை மூடினார்கள். சிலர் மீழ கட்டாமல் இருக்கிறார்கள். சிலர் எடுத்த கடனை சட்டத்துக்கு மீறி முதலீடு செய்தார்கள். 

இதை அறிந்த அரசு சுவிஸ் மத்திய வங்கியின் உத்தரவுக்கு இணங்க பலரை அழைத்து காவல்துறை விசாரித்து வருகிறது.

 பலர் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவிக்கிறார்கள். சிலர் வெள்ளம் வரும் முன்னர் முழுமையாக கட்டி முடிக்கிறார்கள் கொரோனா நிறுவனக் கடனை அந் நிறுவனத்தின் தேவைக்கு மட்டும் உபயோகிக்கலாம் என்ற ஆலோசனையின் கீழ் இக் கைது இடம்பெறுகிறது. 

 பொதுவாகவே சுவிஸ் நாட்டில் கொலை செய்தவனும் பல வழியில் விடுதலையாகலாம் ஆனால் பண மோசடி செய்தால் அதோகதி தான்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!