பிரான்சில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

#Death #France #Hospital #Fight
Prasu
4 months ago
பிரான்சில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

நேற்று இரவு இடம்பெற்ற குழு மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Val-de-Marne மாவட்டத்தில் உள்ள இரு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மோதலில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த மோதலின் போது கத்தி போன்ற கூரான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Créteil நகரில் உள்ள Place de l'Abbaye வீதியில் வைத்து இந்த மோதல் இடம்பெற்றதாகவும், அருகே இருக்கும் சிறு நகர இளைஞர்களோடு நீண்டகாலமாக மோதல் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 மோதலில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!