சுவிட்சர்லாந்தில் பேசும்பொருளாகிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

#Election #America #President #Swiss #Politician
Prasu
3 months ago
சுவிட்சர்லாந்தில் பேசும்பொருளாகிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

அமெரிக்காவில் அடுத்து ஜனாதிபதியாகப்போவது ட்ரம்பா அல்லது கமலா ஹரிஸா என்னும் விடயம் சுவிட்சர்லாந்திலும் பேசுபொருளாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தைக் குறித்து ட்ரம்போ அல்லது கமலா ஹரிஸோ பெரிதாக கவலைப்படப்போவதில்லை என்பது தெரிந்த விடயம்தான்.

ஆனாலும், ட்ரம்பா, ஹரிஸா யார் ஜனாதிபதியானால் சுவிட்சர்லாந்துக்கு நல்லது என்பது குறித்து இப்போதே சுவிஸ் அரசியல்வாதிகள் பேசத்தொடங்கிவிட்டார்கள். காரணம் என்னவென்றால், அமெரிக்காவுக்கு யார் தலைமை ஏற்க உள்ளார்கள் என்னும் விடயம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும். 

சுவிட்சர்லாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல!சுவிஸ் அரசியல்வாதிகளைப் பொருத்தவரை, அமெரிக்க அரசியலைக் குறித்து வெளிப்படையாக பேச அவர்கள் தயங்குவதில்லை. அவர்கள், ஒரு அரசியல் தலைவர் வலதுசாரியினரா அல்லது இடதுசாரியினரா என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 

ஆக, வலதுசாரியினர் குடியரசுக் கட்சி வேட்பாளரை, அதாவது ட்ரம்பை ஆதரிக்கிறார்கள். 

மற்றவர்கள் கமலா ஹரிஸை ஆதரிக்கிறார்கள். வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி ட்ரம்பை ஆதரிக்கிறது. குடியரசுக் கட்சியினரான ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானால் சுவிட்சர்லாந்துக்கு நல்லது என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்குள்ளும் மாற்றுக் கருத்தும் நிலவுகிறது. சிலர், குடியரசுக் கட்சியினர் ஜனாதிபதி பதவிக்கு வந்தால், அவர்கள் பதவியிலிருக்கும்போது, சுவிட்சர்லாந்தை மோசமாக நடத்துகிறார்கள் என்கிறார்.

மற்றவர்கள் கமலா ஹரிஸ் ஜனாதிபதியானால் நல்லது என்கிறார்கள். ட்ரம்புக்கு சுவிட்சர்லாந்தைக் குறித்து கவலை கிடையாது என்று கூறும் Hans Jörg Rüegsegger என்னும் நாடாளுமன்ற உறுப்பினர், புலம்பெயர்தலானாலும் சரி, சமூகப் பிரச்சினைகளானாலும் சரி, ட்ரம்பை விட ஹரிஸ்தான் எங்கள் கொள்கைகளுக்கு நெருக்கமானவர் என்கிறார்.

 ஆக, ட்ரம்ப், கமலா ஹரிஸ் இவர்களில் யார் ஜனாதிபதியானால் சுவிட்சர்லாந்துக்கு நல்லது என்பது தொடர்பில், சுவிஸ் அரசியல்வாதிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!