சுவிஸில் ஆடி அமாவாசை விரதக் குழப்பமும் விளக்கமும்!
சுவிஸ் நாட்டிற்காகக் கணிக்கப்பட்ட இந்த பஞ்சாங்கத்திலும் நான்காம் திகதியே ஆடி அமாவாசை விரதம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சுவிட்சர்லாந்தில் வெளிவரும் சந்திர நாள்காட்டியிலும் நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை 13மணி 13 நிமிடத்திற்கு கூடுவதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இணைப்பு கீழே. 03.08.24 சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படும் விரதத்திற்கும் அமாவாசைக்கும் எந்தவிதத்தொடர்பும் இல்லை.
மூன்றாம் திகதி சனிக்கிழமை மதியம் ஒரு மணி 27 நிமிடத்திற்கு பின்புதான் அமாவாசை என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் செய்யப்படுகின்ற பூஜைகள் பிரார்த்தனை பரிகாரங்களுக்கு மட்டுமே மூன்றாம் திகதி இரவு பொருத்தமானது. ஏனென்றால் 4ம் திகதி இரவு அம்மாவாசை இருக்காது. ஆனால் விரதத்திற்கு அல்ல,சில நாட்காட்டிகளில் பௌர்ணமி இன்று ஆனால் விரதம் நாளை என்றோ அல்லது இன்று பௌர்ணமி விரதம் என்றோ குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை அவதானித்திருப்பீர்கள்.
அல்லது யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதை தெளிவுபடுத்த வேண்டியது சோதிடராக எனது கடமை. கடைப்பிடிப்பதும் கடந்து செல்வதும் உங்கள் சொந்த விருப்பம்.
சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேவஸ்தான ஆடி அமாவாசை நிகழ்வு!
#சோதிடர்: சுதாகர் #சித்தர் #சோதிடநிலையம் www.cittarastro.ch #Cittarastro Zwinglistrasse 37 8004 Zürich