யாழ்ப்பாண வைத்தியர்கள் மிகவும் விரும்பி உண்ணும் சத்துள்ள காளான் கறி செய்வது இப்படித்தான்
சாலையோர கடைகளில் பானிபூரிக்கு அடுத்து, அதிகமா தின்னு தீர்க்க கூடியது இந்த காளான்தான்.
சாயங்கால நேரத்துல ஸ்கூல் பசங்கள்ல இருந்து, வேலைக்கு போகக் கூடிய நபர்கள் வரைக்கும் ஆண், பெண், வயது வித்யாசம் இல்லாம கூட்டம் கூட்டமா தட்டும் கையுமா நிற்கறதை பார்க்கலாம்.
ஆனா இதுல ஒரு வருத்தமான உண்மை என்னன்னா பெரும்பாலான கடைகளில் காளான்ங்கற பெயரில் வெறும் முட்டைக்கோஸ்தான் இருக்கும்.
சரி வாங்க இந்த காளான் வீட்லயே எப்படி செய்யறதுன்னு சொல்றேன் செஞ்சி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க,
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் – 200
கிராம் காளான் – 200 கிராம்
மைதா மாவு – 100 கிராம்
சோள மாவு (கான்பிளவர் மாவு) – 25 கிராம்
கரம்மசாலா – 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
தக்காளி - 3
வெங்காயம் - 2 (பெரியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை
செய்முறை :
முதல்ல முட்டைகோஸையும், காளானையும் நல்லா கழுவி, பொடியா நறுக்கி வச்சுக்கோங்க.
அகலமான பாத்திரத்தில நறுக்கி வச்சிருக்க முட்டைகோஸ், மற்றும் காளானோட மைதா, சோள மாவு, காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கோங்க.
பிசையும் போது தண்ணீர் ஊத்த வேண்டாம். தேவைப்பட்டா ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பிசைஞ்சிக்கோங்க. உப்பு சேர்த்து பிசையும்போது, தானாகவே தண்ணீர் விடும். தவிர, முட்டைகோஸ், காளானை தண்ணீல அலசினப்போ உள்ள தண்ணீ அதில இருக்கும்.
ஒரு சட்டி எடுத்து அதில எண்ணெய் ஊத்தி சூடானதும், பிசைஞ்சு வச்சிருக்க மாவை வடை மாதிரி முறுகலா சுட்டு எடுத்துக்கோங்க. அடுப்பில இன்னொரு பாத்திரம் வச்சு அதில ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊத்தி பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் சேர்த்து வதக்குங்க.
வெங்காயம் வதங்கும் போது, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கோங்க.
புளிப்பு சுவைக்கு தக்காளியை மிக்ஸி ஜார்ல போட்டு நல்லா அரைச்சு, வதக்கும் போது வெங்காயத்தோட சேர்த்துக்கோங்க. தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி, சேர்த்து தொக்கு பதத்திற்கு வர்ற வரைக்கும் , நல்லா வதக்கிக்கோங்க.
(அதாவது தக்காளியின் பச்சை வாடையும், மசாலா பொருட்களின் பச்சை வாடையும், முழுமையாக போக வேண்டும்).
கடைசியா , பொரிச்சு வச்சிருக்க முட்டைகோஸ் காளானை சிறு, சிறு துண்டுகளாக உடைச்சு , இந்த மசாலாவோட சேர்த்து 5 முதல் 7 நிமிஷத்துக்கு கிளறி இறக்கிடுங்க.