சுவையான யாழ்ப்பாண பணியாரம் வேணுமா? செய்து பாருங்கள் - செய்முறை உள்ளே

#SriLanka #Jaffna #Food
Prasu
3 months ago
சுவையான யாழ்ப்பாண பணியாரம் வேணுமா? செய்து பாருங்கள் - செய்முறை உள்ளே

பனங்காய் பணியாரம்

இலங்கையில், குறிப்பாக இலங்கையின் வடக்குப் பகுதியில் பிரபலமான ஒரு உணவுப் பொருளாகும்.

உங்கள் வீட்டில் பழுத்த பனங்காய் இருந்தால் ஒரு நாளாவது இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க. 

பனங்காய் சாப்பிடாதவர்கள் கூட இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே இதை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பனங்களி – 2 கப்

கோதுமை மா – 1 கப்

சீனி – 1/2 கப்

எண்ணெய்- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை

முதலில் பனங்காயில் இருந்து மசித்து எடுத்து பனங்களியை தனியாக வைக்கவும். இதை ஒரு மெல்லிய துணியால் வடித்துக்கொண்டு, பச்சை வாசம் போகும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின் காச்சிய பனங்களியுடன் கோதுமை மா, உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

 இறுதியாக ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பொன்னிறத்தில் பொரித்து எடுக்க வேண்டும்.பின் ஆறியதும் பரிமாறினால் மணக்க மணக்க சுவையான யாழ்ப்பாண பனங்காய் பணியாரம் தயார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!