மேலும் ஒரு பிணைக்கைதியை மீட்ட இஸ்ரேல் ராணுவம்
பாலஸ்தீனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தியது.
இதில், 1,200 பேரை கொன்றதுடன், அங்கு நடந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகக் கடத்திச்சென்றது. அவர்களில் பலர் வெளிநாட்டினர்.
இதைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது.
இதனால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்த அப்பாவி மக்கள் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்தப் போரை நிறுத்தும்படி உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், கடத்திச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் மேலும் ஒருவரை இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டது.
இதுவரை 8 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் வசம் 100-க்கு மேற்பட்ட பிணைக்கைதிகள் இருப்பதாகவும், அதில் பலர் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.