சமூக ஊடகங்களை கையாள்வது தொடர்பில் பொலிஸாரிற்கு வழிகாட்டல்!

#SriLanka #Election #Police
Mayoorikka
2 months ago
சமூக ஊடகங்களை கையாள்வது தொடர்பில் பொலிஸாரிற்கு வழிகாட்டல்!

தேர்தல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் இடம்பெறும் மீறல்களை கையாள்வது குறித்து பொலிஸ் நிலையங்களிற்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஜனாதிபதி தேர்தல் 21ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிரச்சாரங்களின் பிரதான தளமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ளன.

 வேட்பாளர்களை இலக்குவைத்து விமர்சனங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் சமூக ஊடகங்கள் குறித்த முறைப்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் வழங்கியுள்ளது.

 சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் அவற்றை நீக்குவது தொடர்பிலும் பொலிஸ் தலைமையகம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

 சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம், சிஐடியின் கணிணி குற்றப்பிரிவுடன் ஒருங்கிணைப்பது, ஆகியவை குறித்த தெளிவான விளக்கங்களை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்றை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தடைசெய்யப்பட்ட தேர்தல் பிரச்சார உள்ளடக்கங்கள் பரப்படுபவது, குற்றவாளிகளை அடையாளம் காண்பது தொடர்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 பதிவுகளை அகற்றுவது குற்றமிழைத்தவர்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது உட்பட தேர்தல் காலத்தில் சமூக ஊடக விவகாரத்தினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அனைத்து பொலிஸ்நிலையங்களிற்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது தொடர்பில் பொலிஸார் சமூக ஊடகங்களை அவதானித்து வருகின்றனர், ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் விமர்சனங்கள் குறித்த பல முறைப்பாடுகளை ஆராய்ந்து வருகின்றோம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!