கிரீன்லாந்து விவகாரம் - தனது கொள்கைகளை எதிர்க்கும் நாடுகள் மீது வரி விதிக்கும் ட்ரம்ப்!

#SriLanka #taxes #Trump #Greenland
Thamilini
1 hour ago
கிரீன்லாந்து விவகாரம் - தனது கொள்கைகளை எதிர்க்கும் நாடுகள் மீது வரி விதிக்கும் ட்ரம்ப்!

கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதை எதிர்க்கும் எட்டு ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் 10% இறக்குமதி வரி விதிக்கப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். 

இதன்படி டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கிரீன்லாந்தை முழுமையாக வாங்குவதற்கு எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றால் ஜூன் 1 ஆம் திகதி முதல் வரி விதிப்பு 25 சதவீதமாக உயரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வரி அச்சுறுத்தல், டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் நீண்டகால நேட்டோ கூட்டாளிகளுக்கு இடையே ஒரு பிரச்சனைக்குரிய பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதப்படுகிறது. 

    இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!