இலங்கையில் துப்பாக்கி கலாசாரத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த பொறுப்பு ஜே.வி.பிக்கே உரியது!
சுதந்திர இலங்கையின் ஆயுதப் புரட்சி ஆரம்பமாகி மனித மற்றும் பொருள் அழிவுக்கு வித்திட்ட தினமாக 1971ம் ஆண்டின் ஏப்ரல் 4ம் திகதி நம் நாட்டு மக்களினால் வேதனையுடன் நினைவு கூரும் ஒரு நாளாக இருக்கின்றது.
இதற்கு முன்னர் இலங்கையில் என்றுமே ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவருமே ஆயுதம் தாங்கி பொலிஸ் நிலையங்களைத் தாக்கி புரட்சி ஒன்றை ஏற்படுத்தவில்லை.
அப்பாவி சிங்கள இளைஞர்களை ஏமாற்றி அவர்களுக்கு இரகசிய மான முறையில் அன்றைய ஜே.வி.பி. இயக்கத்தின் தலைவர் ரொஹன விஜேவீர, கமநாயக்க உட்பட முக்கியத் தலைவர்கள் 5 பாடங்களை கற்பித்து இளைஞர்களின் மனதை மாற்றி ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்தி அரசாங்கத்தைக் கவிழ்த்தால் மாத்தி ரமே சிங்கள இளைஞர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று கூறி அவர்களை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றார்கள்.
வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும் சாதாரண துப்பாக்கிகளையும், வீடுகளில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளையும் வைத்து ஜே.வி.பி தலைவர்கள் 1971ம் ஆண்டின் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித் தார்கள்.
ஏப்ரல் 5ம் திகதி இரவு அனைத்து பொலிஸ் நிலையங்களையும் திடீ ரென்று தாக்குவதென்று ஜே.வி.பி தலைவர்கள் போட்டிருந்த சதித் திட்டத்தில் தெய்வாதீனமாக ஒரு சிறு பிழை ஏற்பட்டதனால், இல ங்கையில் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அர சாங்கம் இந்த ஆயுதப் போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்படுவது தவிர்க்கப்பட்டது.
ஜே.வி.பி தலைவர்களின் திட்டப்படி 5ம் திகதி இரவு பொலிஸ் நிலை யங்களை தாக்குவதற்கான இரகசிய ஆயத்தங்கள் தயார் நிலை யில் இருந்தது. ஆயினும் ஜே.வி.பி. யின் ஒரு குழுவினர் தவறுத லாக ஏப்ரல் 4ம் திகதி இரவு வெல்லவாய பொலிஸ் நிலையத்தை தாக்கினார்கள். இந்த செய்தி வெளிவந்த சில நிமிடங்களில் சகல பொலிஸ் நிலையங்களும் இத்தகைய தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தன.
பொலி ஸாருக்கு இந்த இரகசியம் தெரிந்துவிட்ட விஷயத்தை அறியாது இருந்த ஜே.வி.பி. குழுக்கள் நாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலை யங்களை இரவில் தாக்கியபோது பொலிஸாரின் பதில் தாக்குதலு க்கு முகம் கொடுக்க முடியாமல் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்கள் ஓடி மறைந்தார்கள்.
அன்றிரவே பொலிஸாரும், இராணுவத்தினரும் நாடெங்கிலும் சுற்றி வளைத்து தேடுதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான இளைஞர் களை விசாரணையின்றி சுட்டுக் கொன்றார்கள். அதையடுத்து இடையிடையே மறைந்திருந்த ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை அழித்துவிடுவதற்கு அன்றைய பிரதம மந்திரியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் கோரிக்கையை அடுத்து இந்திய விமானப்ப டையின் ஹெலிகொப்டர்கள் பேருதவியாக அமைந்தன.
பிரதம மந்திரி ஸ்ரீமாவோ அம்மையார் தாயுள்ளம் கொண்ட கருணை மிக்கவர் அதனால் அவர் காடுகளிலும், வேறிடங்களிலும் தலை மறைவாகியிருந்த சிங்கள இளைஞர்களை வந்து சரணடையுமாறு அறிவித்தார்.
பிரதம மந்திரியின் வேண்டுகோளுக்கு அமைய ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் பொலிஸ் நிலையங்களிலும் இராணுவ முகாம்களிலும் சரணடைந்தனர். பின்னர் ஆயுதப் போராட்டத்தின் முக்கிய தலைவர்களுக்கு எதிராக மாத்திரம் குற்றவியல் நீதி ஆணைக்குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு குற்றம் இழைத்தவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜே.வி.பியின் முக்கியத் தலைவர்களான ரோஹண விஜேவீர, கமநாயக்க போன்றவர்களுக்கு ஆணைக்குழு சிறைத்தண்டனையை விதித்து மற்றவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புமாறு உத்தர விட்டது. இதற்கமைய ஆயிரக்கணக்கானோர் ஓரிரு ஆண்டுகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போதே இவர்களுக்கு பல்கலைக்க ழக பட்டதாரி பரீட்சைகளுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் அனு மதி அளித்தது. விடுவிக்கப்பட்டவர்கள் இன்று அரசாங்க சேவையிலும், தனியார் துறை யிலும் உயர் பதவிகளை வகித்து வருகிறார்கள். ஜே.வி.பி தலை வர்களின் சுயநலத்தினால் தங்கள் வாழ்வையே அழித்துக்கொள்ள விருந்த இவர்கள், ஜனநாயக பாரம்பரியம் இலங்கையில் கட்டியெ ழுப்பப்பட்டதனால் இன்று மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
1971ம் ஆண்டின் ஜே.வி.பி தலைவர்கள் மேற்கொண்ட இந்த அராஜ கத்தினால் எங்கள் நாட்டின் தலையெழுத்தே ஒருவேளை மாற்றம் அடைந்திருக்கலாம். இலங்கையில் துப்பாக்கி கலாசாரத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த பொறுப்பை ஜே.வி.பி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜே.வி.பி ஆயுதம் தாங்கி போராட்டம் செய்த கால கட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தங்கள் கல்வியில் மாத்திரமே கவ னம் செலுத்தி வந்தார்கள்.
அவர்களுக்கு ஆயுதப் போராட்டம் என்றால் என்ன என்று கூட தெரி யாது இருந்தது. இந்த ஆயுத கலாசாரத்தை தமிழ் இளைஞர்களுக் கும் அறிமுகம் செய்து அவர்களை அழிவுப் பாதையில் இட்டு சென்ற பொறுப்பையும் ஜே.வி.பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்விதம் எங்கள் நாட்டுக்கு பெரும் துரோகம் இழைத்த ஜே.வி.பி யினர் இன்று அப்பாவிகளைப் போல் நடித்து ஜனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அரசாங்கக் கட்சியையும், ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளையும் விமர்சித்து தாங்கள் நற்பண்பாளர் கள் போன்று நடிப்பதைப் பார்த்து மக்கள் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள்.