இலங்கையுடன் போர் தொடுப்பேன் என மிரட்டிய இந்திய தூதுவர்: நடுங்கிய பிரேமதாச

#India #SriLanka
Mayoorikka
2 months ago
இலங்கையுடன் போர் தொடுப்பேன் என மிரட்டிய இந்திய தூதுவர்: நடுங்கிய பிரேமதாச

1987ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனேயும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தம் செய்து கொண்ட காலத்தில் பிரதமராக இருந்த பிரேமதாசாவுக்கு இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இருக்கவில்லை. 

இதனால் இந்தியாவுக்கு எதிராக போரில் ஈடுபடுவேன் என மிரட்டியதாக அந் நாட்டுக்கான முன்னாள் இந்தியத் தூதர் லக்கன் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.

 இது குறித்து சில வருடங்களிற்கு முன் அப்போதைய இந்திய தூதுவர் மெஹ்ரோத்ரா 'Indian Foreign Affairs Journal' பத்திரிகையில் இப்போது எழுதியுள்ள கட்டுரையில்,

 இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அமைதியை ஏற்படுத்தவும் புலிகளை ஒடுக்கவும் 1987ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனேயும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

images/content-image/2024/09/1725635555.jpg

 இதையடுத்து அங்கு அமைதி காக்கும் பணியில் ஈடுபட இந்திய ராணுவத்தினர் சென்றனர். ஆனால், அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசாவுக்கு அந்த ஒப்பந்தத்தில் விருப்பமில்லை. பின்னர் 1988ம் ஆண்டு பிரேமதாசா அதிபராக பொறுப்பேற்றவுடன், இந்திய ராணுவத்தினரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதே தனது முதல் பணியாகக் கருதினார்.

 1989ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் ரகசிய பேச்சு நடத்திய அவர், அதே ஆண்டு ஜூலைக்குள் இந்திய ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என பகிரங்கமாக அறிவித்தார்.

 இந்நிலையில், அவரிடம் பேச்சு நடத்தச் சென்றேன். அப்போது, இந்திய ராணுவத்தினர் வெளியேறாவிட்டால், அவர்களுடன் போரிடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார். அதற்கு நான், "அமைதி குறித்து பேசவே நான் வந்தேன். 

நீங்கள் விரும்பினால் போரிடவும் இந்தியா தயார்'' என்றேன். இந்த பதிலை எதிர்பார்க்காத பிரேமதாசா கடும் அதிர்ச்சியடைந்து என்னை முறைத்தார். இரண்டு நிமிடங்கள் அவர் எதுவும் பேசவில்லை. அவரது கை, கால்கள் நடுங்குவதைப் பார்த்தேன்.

 உடனே, அங்கிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னே, என்னை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். நான் உடனடியாக எங்கள் தொலைக் காட்சியில் தோன்றி இது குறித்துப் பேசப் போகிறேன்.

 இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை; இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது இந்தியாவின் ஆக்கிரமிப்புப் படை என்று அறிவிப்பேன். அது சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்றார் பிரேமதாசா. அதற்கு நான், "எங்களது நற்பெயரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 

அது பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம்'' என்றேன். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பிரேமதாசா, இங்கு இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து இருந்தால், அது எனது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும். இனி நீங்கள் வரும்போது எனது இறுதிச் சடங்கைத்தான் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மிரட்டினார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், 1990-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய ராணுவத்தினர் திரும்ப அழைக்கப்பட்டனர். 

இந்தப் பேச்சுவார்த்தைகளில் எனது பங்கு அதிகம் என்பதால், என்னைக் கட்டிப்பிடித்து பிரேமதாசா பாராட்டினார் என்று லக்கன் லால் மெஹ்ரோத்ரா கூறியுள்ளார்.

 இதில் முக்கியமான விஷயம், இந்தியாவில் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி வந்தவுடன் திமுகவின் நெருக்கதலையடுத்தே அமைதி காக்கும் படையை இந்தியா வாபஸ் பெற்றது. 

இது குறித்து மெஹ்ரோத்ரா தனது கட்டுரையில் எதையும் தெரிவிக்கவில்லை. அமைதி காக்கும் படை திரும்பி சில காலத்திலேயே பிரேமதாசாவும் ரஞ்சன் விஜேரத்னேவும் புலிகளால் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!