இலங்கையின் பாரம்பரிய மருத்துவத்தை உலகம் முழுவதும் மேம்படுத்த வேண்டும் - ரணில்!
இலங்கையின் பாரம்பரிய மருத்துவத்தை உலகம் முழுவதும் மேம்படுத்துவதுடன், நாட்டுக்கு மிகவும் தேவையான வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வரவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
இலங்கை பாரம்பரிய வைத்திய நிபுணர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், உலகம் முழுவதும் பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துவதற்கான முதல் படி ஆராய்ச்சியை மேற்கொள்வதாகும்.
"உள்ளூர் மருத்துவ மரபுகள் மற்றும் அமைப்புகளின் தோற்றத்தை தீர்மானிக்க ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம். பின்னர் அதன் அறிவியல் அடிப்படையை நாம் தீர்மானிக்க வேண்டும்.
எங்களுடைய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அறிவியல் அடிப்படை உள்ளது என்பதை நிரூபிக்க முடிந்தால், அதை உலகளாவிய ரீதியில் ஊக்குவிக்க முடியும். இந்தியா தனது பாரம்பரிய மருத்துவ முறையை மேம்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர். நாமும் பின்பற்ற வேண்டும்,''
இலங்கையின் சுதேச வைத்திய நிபுணர்களின் கோரிக்கைகளை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது என்பதைப் பார்ப்பதற்காக அவர்களுடன் ஒரு உரையாடலைத் தொடங்க நான் தயாராக இருக்கிறேன்.
சுதேச மருத்துவ முறைகளை பொறுப்பேற்கவும், அவற்றை மேம்படுத்தவும் ஒரு சிறப்பு மருத்துவ கவுன்சிலை அமைக்க நான் முன்மொழிகிறேன். சுதேச மருத்துவ முறைகளும் சுற்றுலாவும் கைகோர்த்துச் செல்ல வேண்டும்”