பொலன்னறுவையில் இடம்பெற்ற கோர விபத்து : இந்திய பிரஜை உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
பொலன்னறுவையில் இடம்பெற்ற கோர விபத்து : இந்திய பிரஜை உயிரிழப்பு!

பொலன்னறுவை ஜயந்திபுர 23 தபால் நிலையத்தில் நேற்று (6.09) இரவு வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய பிரஜை உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பொலன்னறுவையில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த வேன், அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியோரத்தில் இருந்தபோது விபத்துக்குள்ளானது. 

உயிரிழந்தவர் உட்பட இந்தியப் பிரஜைகள் இந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிய வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், அவர்கள் தங்குமிடத்திற்குச் செல்லும் போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.  

வேகமாக வந்த வேன் லாரியின் பின்புறம் மோதியதில், டிரைவர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த இந்தியர் உயிரிழந்தார். தற்போது சாரதி உட்பட அனைவரும் பலத்த காயங்களுடன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

லொறி மற்றும் சாரதி பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (7) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!