ஊரே மணமணக்க, நாவில் எச்சில் ஊற மட்டன் கறி செய்வது எப்படி?

#Cooking #Food #Mutton
Mayoorikka
2 hours ago
ஊரே மணமணக்க, நாவில் எச்சில் ஊற மட்டன் கறி செய்வது எப்படி?

பொதுவாகவே அனைவருக்கும் சுவையான கறி செய்து சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அசைவத்தை சாப்பிட விரும்புபவர்கள் எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து பார்ப்பார்கள்.

 அந்தவகையில் அனைவருக்கும் பிடித்த மட்டன் வைத்து எப்படி ராஜஸ்தானி மட்டன் கறி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

 தேவையான பொருட்கள்

 மத்தானியா மிளகாய் - 50 கிராம்

 மட்டன் கறி - அரை கிலோ

 பெரிய வெங்காயம் - 5

 இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு

 தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்

 பட்டை, கிராம்பு போன்ற மசாலா பொருட்கள் - 

தாளிப்பிற்கு ஏற்ப உப்பு -

 ருசிக்கு ஏற்ப நெய்- 2 டேபிள் ஸ்பூன்

 images/content-image/2024/1729316366.jpg

 முதலில் மத்தானியா மிளகாய் மிருதுவாகும் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். பின் அதை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.

 இதையடுத்து ஒரு பாத்திரத்தில் கடகு எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஜாதிபத்ரி, ஜாதிக்காய், கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

 பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் மத்தானியா மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் மட்டன் கறியையும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் அரைத்த மிளகாயை சேர்த்து நன்றாக கலந்து வதக்கி எடுக்கவும்.

 இறுதியாக அதனுடன் தனியா தூள், உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து 5 நிமிடங்களுக்குப் பிறகு தயிர் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து சுமார் 1 மணி நேரத்திற்கு மட்டன் கறியை நன்கு வேக வைக்கவும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!