வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பின்னால் இருக்கும் அமானிய சக்தி என்ன?

#SriLanka #Election #Hospital
Mayoorikka
4 weeks ago
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பின்னால்  இருக்கும்  அமானிய சக்தி என்ன?

சாவகச்சேரி பிரச்சனையிலிருந்து உள்ளூரில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியிலே பலருடைய மனதிலே இடம் பிடித்தவரும் வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் என்பது அனைவரும் தெரிந்த விடயம்.

 சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் பல மக்கள் அவருக்கு ஆதரவு செலுத்தினார்கள் அவர்களுக்கு ரசிகர்களே தோள் கொடுத்து உதவினார்கள் பல கட்சிகள் அவருக்கு உதவ வந்தது. ஆனால் அதன்பிற்பாடு அவருடைய நடைமுறை சிக்கல்களால் கட்சிகளும் அவருக்கு ஆதரவு செலுத்தியவர்களும் பல ஊடகங்களும் அவரை கைவிட்டன.

 அதன் பிற்பாடு அவர் தன்னுடைய முகநூலின் நேரலைகள் ஊடாக தன்னுடைய சில பதிவுகள் மூலம் தன்னை நியாயப்படுத்தியும் பல அரசியல்வாதிகளை சந்தித்து பயனற்று போனது. அதே வேளையிலே தன்னை அறிந்தோ அறியாமலோ பலர் மீது குற்றங்களை சுமத்தினார். அந்த குற்றங்கள் சுமத்தப்பட்ட ரீதியிலே அவர் மீது பல வழக்குகள் கொடுக்கப்பட்டு அவர் சிறைக்குச் சென்று வெளியே வந்தது நாங்கள் அறிந்த விடயம்.

 அதன் பிற்பாடு முழுமையாக அரசியலில் சுயட்சியில் இறங்கப் போவதாக எட்டுப் பேர் ஒன்று சேர்ந்து சுயேச்சையாக இப்பொழுது பிரபல்யமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறனர். அந்த பிரச்சாரத்துக்குள்ளும் வெளியேயும் இருக்கின்ற அந்த அமானிய சக்திகள் என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்கப் போகின்றது? என்று அறியாத அளவிற்கு பல தடைகளையும் தாண்டி வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த தடைகளை நாங்கள் பார்க்க முடியும். 

 ஒன்று அவர் அண்மையில் ஒரு பெண் ஒருவர் அவரை தேவையற்ற வகையிலே சீண்டியதாகவும் ஒரு வேட்பாளர் என்று தெரிந்து அவருக்கு துண்டு பிரசுரம் கொடுத்ததாகவும் அவருடன் தகராறு செய்த வேளை அர்ச்சனாவினுடைய வளமையான அந்த கோபத்தை அதிலே காட்டி அவர் தன்னை அறியாமல் அவரை பொங்கி எழுந்தது மக்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஒரு சிறிய மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதேவேளை அவருடன் நிற்கின்ற மயூரன் என்கின்ற ஒருவரை தன்னுடைய பிரதான பேச்சாளராக வைத்திருக்கிறார். 

அவரை மையமாக வைத்து தான் இந்த அர்ஜுனா உடைய கட்சி ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஒரு சில ஊடகங்களிலே நாங்கள் பார்க்கின்ற பொழுது மயூரன் என்பவர் நாங்கள் நினைத்தது போன்று இல்லாமல் அவர் சற்று ஒரு யதார்த்தவாதியாகவும் அவருடைய பேச்சுக்கள் பதில்கள் எல்லாம் ஒரு ஒரு தேர்ச்சி பெற்ற அனுபவமான ஒரு பேச்சாளர் போன்றும் அரசியல்வாதி போன்றும் அவருடைய கருத்துக்களும் அவருடைய பதில்களும் அமைந்திருப்பது அச்சுனாவுக்கு ஒரு புதிய இரத்தத்தை ஊட்டியது போல பார்க்க கூடியதாக இருக்கிறது.

 ஆனால் தேர்தல் நெருங்கி வரும் காலகட்டங்களில் அர்ச்சனாவால் அவருடைய பழக்கவழக்கங்களால் அல்லது அவருடைய முற்கோபத்தால் மயூரன் கூட விலகிச் செல்லலாம் என்ற ஒரு ஐயப்பாடும் ஒரு பயமும் அவருக்கு ஆதரவு செலுத்துகின்றவர்களுக்கும், அவர்களோடு சுயேட்சை கட்சியிலே இணைந்து நிற்பவர்களுக்கும் ஒரு பயமாகவும் இருக்கிறது.

 அந்த வகையிலே கௌசல்யா என்கின்ற ஒரு இளம் பெண் சட்டத்தரணி அந்த சுயேட்சை கட்சியிலே வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்தநிலையில் உணவு விடுதியில் நடைபெற்ற அந்த பெண்ணோடு நடைபெற்ற அந்த பிரச்சனைக்கு அவர் மன்னிப்பு கூறியதாகவும் நாங்கள் சில வீடியோக்களை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது.

 எது எதுவாக இருப்பினும் அவர்கள் நோக்கம் நிறைவேற வேண்டும் மக்களுக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அர்ச்சுனாவுடன் மயூரனை போன்ற ஒரு சில அறிவாளிகள் அவர்களின் தூர நோக்குகள் அவர்களுடைய பேச்சுக்கள் உண்மையாக இருக்குமாக இருந்தால் மக்கள் அவர்களையும் அனுசரிக்கலாம்.

 அவர்கள் மீது நாங்கள் தேவையற்ற பழிகளை வீணாக சுமத்தாமல் அர்ச்சுனா ஒருவருடைய கொள்கையை மாத்திரம் வைத்து பார்க்காமல் அந்த எட்டு பேருடைய கொள்கைக்குள் அதிகமான கொள்கைகள் நல்ல கொள்கையாக இருந்தால் மக்கள் சிந்தித்து அவர்களுக்கு கூட வாக்களிக்கலாம் என்பதை நாங்கள் கூறி நகர்ந்து செல்கின்றோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!