பிரான்சில் டிக் டாக் செயலி மீது 7 வழக்குகள் பதிவு

#France #Social Media #TikTok #Case
Prasu
2 weeks ago
பிரான்சில் டிக் டாக் செயலி மீது 7 வழக்குகள் பதிவு

பிரபல சமூகவலைதள செயலியான 'டிக்-டாக்' தனியுரிமையை மீறுவதாக கூறி பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன.

இதற்கிடையே பிரான்சில் இரு சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து குழந்தைகளிடையே மன அழுத்தம், தற்கொலை போன்றவற்றை 'டிக்-டாக்' செயலி தூண்டுவதாக கூறி 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

 இதுதொடர்பான வழக்கு விசாரணை பாரீஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதனால் 'டிக்-டாக்' செயலி புதிய சிக்கல்களை எதிர்கொள்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!