மீண்டும் ராஜபக்ஷர்கள் கையில் நாடு!! நாமலை நெருக்கடிக்குள்ளாக்கும் NPP அரசாங்கம் : அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மக்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷவை எவ்வழியிலாவது நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின்போது அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானம் முற்றிலும் தவறானது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
அந்த தவறை திருத்திக் கொள்வதற்கு மக்கள் தயாராகவுள்ளார்கள். அதனால் மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க ஒன்றிணைந்துள்ளார்கள்.
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். இதனை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது.
இதனால் நாமல் ராஜபக்ஷவை எவ்வழியிலாவது நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் மாபெரும் மக்கள் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.நாடளாவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்துவோம்” என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே