டொனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய 200 மில்லியன் டாலர் செலவிட்ட எலோன் மஸ்க்

#Election #America #ElonMusk #President #Trump
Prasu
3 weeks ago
டொனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய 200 மில்லியன் டாலர் செலவிட்ட எலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய உருவாக்கிய செயற்குழுவுக்கு Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், 200 மில்லியன் டாலர் செலவிட்டதாக தெரியவந்துள்ளது.

தேர்தல் பணிகளுக்காக அந்தச் செயற்குழு அமைக்கப்பட்டது. அதற்குப் பெருமளவு தொகையை வழங்கியவர் மஸ்க் என்றும் நம்பப்படுகிறது. முதன்முறை வாக்களிப்பவர்களையும் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களையும் டிரம்ப்புக்கு ஆதரவு வழங்க ஊக்குவிப்பதே செயற்குழுவின் முக்கியப் பணியாக இருந்தது.

டிரம்ப்பின் வெற்றிக்கு மஸ்க் பணம் மட்டும் செலவிடவில்லை. தேர்தல் பிரசார மேடைகளிலும் அவர் டிரம்ப்புடன் தோன்றி தமது ஆதரவைத் தெரிவித்தார்.

 அதன் மூலம் அவரை முன்னுதாரணமாய் கருதும் பல இளையர்கள் டிரம்ப்புக்கு ஆதரவளித்ததாக கூறப்படுகின்றது. தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டிரம்ப் புளோரிடாவில் வெற்றி உரை ஆற்றியபோது எலோன் மஸ்க்கைப் புகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!