கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
#people
Prasu
2 hours ago
உலகில் பலருக்கும் கோபம் வருவது ஒரு பிரச்னையாக இருக்கும். சிலர் கோபப்படக்கூடாது என இருப்ப்பார்கள், சிலர் கோபத்தை கட்டுப்படுத்த நினைப்பார்கள்.
கோபத்தால் நாம் சாதிக்கப்போவது ஒன்றும் இல்லை என்பதுடன், அதனால் இழப்பதுதான் அதிகம் இருக்கும். எனவே, நம் கோபத்தை கையாள நாம் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கிய விடயங்கள்.
- கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு முன்பு, நாம் நம் கோபத்தின் தன்மையை பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
- நமக்கு எதற்காக கோபம் வருகிறது, நாம் சரியான விஷயங்களுக்குத்தான் கோபப்படுகிறோமா, அல்லது கோபம் கொள்ள வேண்டும் என்பதற்காகக் கோபப்படுகிறோமா என்று சிந்திக்க வேண்டும்.
- கோபத்தை வெளிப்படுத்தும்போது, நாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கோபம் எதனால் ஏற்படுகிறது என்பதை, ஓய்வாக இருக்கும் நேரங்களில் யோசித்து, உங்களுக்கு கோபம் ஏற்படுத்தும் அந்தச் சூழலை சரிசெய்யுங்கள்.
- தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இவை புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதுடன் மனதை ஒருமுகப்படுத்தவும், உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவும்.
- மனிதர்களுடன் அதிகமாகப் பழகுங்கள், பகிருங்கள். பயணங்களை மேற்கொள்ளுங்கள். அது ஒரு நாளாக, ஒரு மணி நேரமாக இருந்தாலும் பயணம் செய்யுங்கள்.
- புத்தகங்கள் படியுங்கள். குறிப்பாக, தத்துவம், தன்னம்பிக்கை, நகைச்சுவை, சுவாரஸ்யமான கதைகள் எனப் படிக்கும்போது அது உங்களை இலகுவாக்கும்.
- எந்த ஒரு விஷயத்தையும் உங்கள் கோணத்தில் இருந்து மட்டுமே பார்க்காமல், மற்றவர்களின் கோணங்களில் இருந்தும் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
- தினமும் ஒரு 20 நிமிடங்கள் உங்களுக்கு என ஒதுக்குங்கள். அந்நேரத்தை உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் செலவிடுங்கள். அது உங்களை உங்களுக்குப் பிடிக்க வைக்கும்.
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றும்போது நிச்சயமாகக் கோப குணம் குறையும்.