செங்கடலில் விபத்துக்குள்ளான படகு : சுவிஸ் பிரஜை ஒருவர் மாயம்!
#SriLanka
#Switzerland
Dhushanthini K
4 months ago

செங்கடலில் இடம்பெற்ற விபத்தில், 15 பேர் காணாமல் போயுள்ளனர்.
சுமார் 30 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களில் சுவிஸ் பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றுமொரு சுவிஸ் பிரஜை காயமின்றி காப்பாற்றப்பட்டுள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
காணாமல்போனவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.



