பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் - 6 பாதுகாப்பு வீரர்கள் பலி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72), மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
ஆனால், இம்ரான்கானை விடுதலை செய்ய அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.
இதனைப் பொருட்படுத்தாத இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.



