இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்

#Israel #War #ceasefire #Lebanon
Prasu
4 months ago
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்

லெபனானின் ஹெஸ்பொல்லாவுடன் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு தனது அமைச்சரவை ஒப்புதல் அளிப்பதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

லெபனான் முழுவதும் வான்வழித் தாக்குதல்கள் இலக்குகளைத் தாக்கியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேலிய பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இஸ்ரேல்- லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. முயற்சி மேற்கொண்டன. இதற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 

இஸ்ரேல் அரசின் கீழ் இயங்கி வரும் அதிக அதிகாரம் படைத்த பாதுகாப்பு கேபினட் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமல் படுத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!