அனர்த்தத்தினால் திருகோணமலையில் 2942 குடும்பங்களைச் சேர்ந்த 8752 பேர் பாதிப்பு

#SriLanka #Trincomalee
Mayoorikka
2 hours ago
அனர்த்தத்தினால் திருகோணமலையில் 2942 குடும்பங்களைச் சேர்ந்த 8752 பேர் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் 2942 குடும்பங்களைச் சேர்ந்த 8752 பேர் பாதிப்பு மற்றும் 131 குடும்பங்களை சேர்ந்த 329 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதன்கிழமை (27) பிற்பகல் 05.00 மணிக்கு பெறப்பட்ட புள்ளி விபரத் தகவலின் படி 2942 குடும்பங்களைச் சேர்ந்த 8752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

131 குடும்பங்களைச் சேர்ந்த 329 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 882 குடும்பங்களைச் சேர்ந்த 3173 பேர் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். மேலும் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் அவர்கள் தெரிவித்தார்.

 சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேரும், மூதூர் பிரதேச செயலகத்தில் 1229 குடும்பங்களைச் சேர்ந்த 3452 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 298 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும், மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 434 குடும்பங்களைச் சேர்ந்த 1698 பேரும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 709 குடும்பத்தைச் சேர்ந்த 1852 பேரும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 81 குடும்பத்தைச் சேர்ந்த 207 பேரும், கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் 60 குடும்பத்தைச் சேர்ந்த 238 பேரும், வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 13 குடும்பத்தைச் சேர்ந்த 40 பேரும், பதவிஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவில் 01 குடும்பத்தைச் சேர்ந்த 05 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 சேருவில பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் சண்பகவல்லி வித்தியாலயத்திலும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த 82 பேர் பாரதிபுரம் பாடசாலையிலும் முத்துநகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்திலும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 59 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலிலும் தங்க வைக்கப்பட்டு தேவையான வசதிகளை அமைத்து கொடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!