இந்தியாவில் 25 வயது ஏர் இந்தியா விமானி தற்கொலை

#India #Death #Delhi #Women #Pilot
Prasu
4 months ago
இந்தியாவில் 25 வயது ஏர் இந்தியா விமானி தற்கொலை

ஏர் இந்தியாவில் பணியாற்றிய பெண் விமானி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட 25 வயது ஸ்ருஷ்டி துலி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். டில்லியில் பயிற்சிக்காக சென்ற போது, ஆதித்யா பண்டிட் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

கடந்த 25ம் தேதி வரை இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அன்றைய தினம் காரில், ஆதித்யா டில்லி சென்றுள்ளார். அப்போது அவரை மொபைல்போனில் அழைத்த ஸ்ருஷ்டி, தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் ஆதித்யா வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் ஒருவர் உதவியுடன், கதவை திறந்து சென்ற போது ஸ்ருஷ்டி,தூக்கு போட்டுக் கொண்டது தெரிந்தது.

 உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ருஷ்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!