காரைத்தீவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் : உழவு இயந்திரத்தின் சாரதி கைது!
#SriLanka
#Arrest
#Driver
Dhushanthini K
1 week ago
காரைத்தீவு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று நீரில் மூழ்கிய விவகாரத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு படையினரின் அறிவுறுத்தல்களை மீறி பணத்திற்காக ஆபத்தான பயணித்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, உழவு இயந்திரம் கவிழ்ந்து காணாமல் போன நான்கு பாடசாலை மாணவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு மாணவர்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.